Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனோ பாலாவுக்குள் இவ்வளவு திறமையா? இறந்த பின் பேசப்படும் பெருமைகள்!

Webdunia
புதன், 3 மே 2023 (17:00 IST)
திறமையான நடிகர் மற்றும் இயக்குநர் மனோ பாலா இயக்குநராகத் தொடங்கிய அவரின் பயணம், இன்று YouTube Channel நிறுவி திறன்பட நடத்தி இன்றைய தலைமுறைக்குச் சவால் விடும்படி அவ்வளவு ஆக்ட்டீவாக ஆக இயங்கி வந்தார். மனோபாலாவை நமக்கு காமெடி நடிகராக மட்டுமே தான் பெரும் பாலும் தெரிந்திருக்கும். 
 
ஆனால், அவர் சிறந்த நடிகர் , இயக்குநர் என தமிழ் சினிமாவில் திறமையையை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் கம்ல்ஹாசனின் பரிந்துரையால் 1979ஆம் ஆண்டு ’புதியவார்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவின் உதவியாளராக தனது திரை வாழ்கையை தொடங்கினார். தொடர்ந்து ஆகாய கங்கை, ரஜினியின் ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மல்லுவேட்டி மைனர், வெற்றி படிகள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 
 
அதன் பின்னர் 1994ஆம் ஆண்டு தாய்மாமன் படத்தில் நடிக்க தொடங்கி தொடர்ந்து பல்வேறு  திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணைக்கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவரது தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய சதுரங்கவேட்டை படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பாம்பு சட்டை, சதுரங்க வேட்டை 2 போன்ற படங்களை தயாரித்துள்ளார். தற்போது விஜய்யின் லியோ படத்தில் நடித்து வந்தார். இவ்வளவு திறமைகள் இருந்தும் பெருமை பேசாமல் சாதாரணமாக வாழ்ந்துவிட்டு இந்த உலகத்தை விட்டு பிரிந்துள்ளார். சிறந்த கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய கவுதம் கார்த்திக்!

பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் பத்திரிக்கையாளர்களுடன்- நடிகை சாக்ஷி அகர்வால்!

தமிழில் வருகிறது நருட்டோ ஷிப்புடென்..! – ரிலீஸ் தேதியை அறிவித்த Sony YAY!

மஹத் ராகவேந்திரா-மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கும் 'காதலே காதலே' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இளம் வயதினரிடையே நட்பு மற்றும் அவர்களது கனவுகள் குறித்து பேசும் படம் - "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே"

அடுத்த கட்டுரையில்
Show comments