Publish Date: Friday, 30 January 2026 (17:42 IST)
Updated Date: Friday, 30 January 2026 (01:44 IST)
தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் படம் அரிமாநம்பி. முருகதாஸின் உதவியாளர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.
விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்திருக்கும் இதுவொரு ஆக்ஷன் படம். படத்தில் சண்டைக் காட்சிகள் பிரதானமாக இடம்பெறுகிறது. முக்கியமாக வடசென்னையில் விக்ரம் பிரபுவை எதிரிகள் துரத்தும் சேஸிங் காட்சியை பிரமாண்டமாக எடுத்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக காதல் காட்சிகளும் உள்ளன. பாங்காக்கிலுள்ள அருவியொன்றில் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம் டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருப்பது. அவர் திரைப்படம் ஒன்றுக்கு இசையமைப்பது இதுவே முதல்முறை. பாடல்கள் வெளியாகி ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருப்பது படத்தின் பலம்.
மொத்தம் 400 திரையரங்குகளில் அரிமா நம்பியை தாணு வெளியிடுகிறார். இது தமிழக கணக்கு.
சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது.
ஜூலை 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.