Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"நட்பே துணை" திரைவிமர்சனம்

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (15:11 IST)
கதைக்கரு:- 
 
ஹாக்கி விளையாட்டையும், விளையாட்டு மைதானத்தையும்  கார்பரேட் நிறுவனத்திடம் இருந்து ஆதி தனது அணி நண்பர்களுடன் இணைந்து எப்படி எதிர் கொள்கிறார் என்பதே  "நட்பே துணை" திரைப்படத்தின் கதை. 

 
கதைக்களம்
 
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து நிறுவனத்தை, காரைக்காலில் உள்ள ஒரு பழம்பெரும் ஹாக்கி விளையாட்டு மைதானத்தை அகற்றிவிட்டு அங்கு கட்டுவதற்காக முயற்சி செய்கிறது. அதற்கு விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கும் கரு.பழனியப்பன் துணை போகிறார். 
 
இந்த பிரச்னையிலிருந்து மைதானத்தை காப்பாற்ற ஆதி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்த ஹாக்கி அணி தேசிய அளவில் சாதிக்க வேண்டிய கட்டயத்திற்கு தள்ளப்பட அவர்கள் தேசிய அளவில் சாதிக்கின்றனரா... இல்லையா?, மைதானம் காப்பாற்றப்படுகிறாதா?  தவறான கார்பரேட் நிறுவனத்திற்கு துணை நிற்கும் அரசியல்வாதிக்கு எப்படி பாடம் புகட்டுகின்றனர் என்பது தான் படத்தின் மொத்த கதை. 
 
படத்தின் ப்ளஸ்:- 
 
அழிந்து வரும் ஹாக்கி கேமை கொண்டு வந்ததற்கே பாராட்டவேண்டும். இடைவேளை காட்சி, கிளைமேக்ஸ் காட்சி சரவெடி வெடிக்கிறது.
 
ஹிப்ஹாப் ஆதி தனக்கு என்ன வருமோ அதை சரியாக தெரிந்து அசத்துகிறார். ஆட்டம், பாட்டம், எமோஷ்னல் ஏன் இதில் இடைவேளை காட்சியில் செம்ம மாஸ் கூட காட்டியுள்ளார். விளையாட்டு துறை சம்பந்தமான கதையை தேர்ந்தெடுத்த போதே படம் பாதி வெற்றி பெற்று விட்டது. அதோடு நடிப்பு, இசை, நடனம் என நாயகன் ஆதி தன்னால் முடிந்த அனைத்து வித்தையையும் காட்டியுள்ளார். 
 
இந்த படத்தின் வில்லனாக, அரசியல்வாதியாக வரும் கரு.பழனியப்பனின் டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என அனைத்தும் அரசியல்வாதியாகவும், வில்லனாகவும் நியாயப்படுத்தும் விதத்தில் கச்சிதமாகவும் சிறப்பாக உள்ளது. அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அரங்கை அதிர வைக்கிறது.   ஹாக்கி அணி பயிற்சியாளராக வரும் ஹரீஸ் உத்தமன் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். 
 
படத்தின் காட்சிகளை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்து உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங், இவரது காட்சிகளுக்கு ஆதியின் இசை கூடுதல் பலம் கொடுத்துள்ளது. படத்தில் எருமசாணி விஜய், ஷாரா என பல யூடியூப் பிரபலங்களும் வந்து செல்கின்றனர். அதிலும் கிடைக்கின்ற கேப்பில் ஸ்கோர் செய்கின்றனர்.ஆர்ஜே விக்னேஷ், ஷாரா,  பிஜிலி ரமேஷ் ஆகிய யூடியூப் ஸ்டார்ஸ் இணைந்து சிரிப்பை வரவழைக்க முயற்சித்திருக்கிறார்கள். 
 
படத்தின் மைனஸ்:
 
ஜாதி, மதத்தால் பிரிந்திருப்பதை சேர்ப்பது,வாக்களிப்பதன் அவசியம் குறித்த வசனங்கள் பலமாக இருந்தாலும், "அவ கூப்பிட்டாலே வந்திருப்பா" என்ற வசனங்கள், மற்றும் ஆதிக்கும் ஹீரோயினுக்கும் இடையேயான காதல் காட்சிகள் உள்ளிட்டவை அவ்வளவாக கை கொடுக்கவில்லை. அது படத்தின் பரபரப்பை குறைத்திருப்பதாக தான் தெரிகிறது. ஆகவே, காதல் காட்சிகள் படத்தின் பலவீனமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். 
 
இருந்தாலும் நண்பர்கள் ஒன்றுகூடி "நட்பே துணை" படத்தை ஒருமுறை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம்.
 
நட்பே துணைக்கு வெப்துனியாவின் மதிப்பு:- 3\5

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments