Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 10 ஆயிரம் தீவிரவாதிகள் உள்ளனர்: சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (08:40 IST)
தமிழகத்தில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மூளைச்சலவை செய்வதால்தான் போராட்டங்கள் வன்முறையாக மாறி வருவதாகவும் ஏற்கனவே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாக பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் ஒரு தீவிரவாதி கூட இல்லை என்ற முதல்வரின் கருத்தை தான் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கூறிய சுப்பிரமணியன் சுவாமி, தமிழகத்தில் துப்பாக்கி வைத்து கொலை செய்யும் கூட்டமும், பிரெளன்சுகர் விற்கும் தீவிரவாதிகள் நடமாட்டமும் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
தனது கணக்குப்படி தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாகவும் இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சுவாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments