Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸார் தடியடி: உத்தர பிரதேசத்தில் 11 பேர் பரிதாப பலி!

Webdunia
சனி, 21 டிசம்பர் 2019 (11:18 IST)
உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். 
 
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தின் கண்டாநகர், கோரக்பூர், ஷமாரூஃப், இஸ்மெயில் பூர் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கோரக்பூரில் நடந்த போராட்டத்தை போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது, மோதல் ஏற்பட்டது. போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் நொறுக்கப்பட்டன. பின்பு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
 
மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 6 பேர் உயிரிழ்ந்துள்ளதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் இப்போது வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ல் இருந்து 11ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments