Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் 144 தடை உத்தரவு.. அனுமன் கொடியை அகற்றியதால் பதட்டம்..

Mahendran
திங்கள், 29 ஜனவரி 2024 (14:39 IST)
கர்நாடக மாநிலத்தில் 144 அடி உயரமுள்ள அனுமன் கொடி ஏற்றப்பட்ட நிலையில் அந்த கொடி இறக்கப்பட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் சமீபத்தில் 108 அடி உயரத்தில் கொடி கம்பம் நிறுவப்பட்டு அதில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தேசிய கோடிக்கு பதிலாக அனுமன் கொடி ஏற்றப்பட்டதாக புகார் வந்தது. 
 
இதனை அடுத்து அனுமன் கொடியை அகற்றும் படி அதிகாரிகள் கூறிய நிலையில் அனுமன் கொடியை அகற்ற முடியாது என இந்து ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் சென்று அனுமன் கொடியை அகற்றினர். 
 
இதனை அடுத்து அந்த பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது என்பதும்,  போராட்டத்தில் பாஜக மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்களும் இணைந்ததால் பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments