பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்த 120 இந்திய மாணவர்கள் உள்பட மொத்தம் 150 இந்தியரகள் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் அவர்கள் நாடு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இந்த 150 இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நெல்லை மாணவி ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை பேட்டி அளித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் மலேசியாவில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க உடனடியாக ஏர் ஏசியா விமானம் மலேசியாவுக்கு அனுப்பப்படும் என்று தெரிவித்திருந்தார் இதனை அடுத்து மலேசியாவில் இருந்து ஏர் ஆசியா இந்தியா விமானம் மூலம் 150 மாணவர்கள் பத்திரமாக விசாகப்பட்டினம் வந்தடைந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது
இந்தியா திரும்பிய 150 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மருத்துவ சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் மருத்துவ சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டவுடன் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது
மலேசியாவில் சிக்கி தவித்த இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்ததற்கு மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்