Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு டார்கெட் வைத்த அமலாக்கத்துறை? அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!

Mahendran
வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (12:00 IST)
இந்தியா கூட்டணியில் உள்ள சில தலைவர்களுக்கு ஏற்கனவே குறி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 18 தலைவர்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன.

இந்தியா கூட்டணியில் உள்ள ஹேமந்த் சோரன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. மேலும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாஜக பக்கம் வந்து விட்டார் என்பதால் அவருக்கு பிரச்சனை இருக்காது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள 18 பெரிய தலைவர்கள் அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாகவும் இதனால் இந்தியா கூட்டணி தேர்தலுக்குள் பெரும் சிக்கலை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.  
லாலு பிரசாத் யாதவ், தேஜாஸ்ரீ யாதவ் ஆகியோர்கள் மீது ஏற்கனவே வழக்கு இருக்கும் நிலையில் அந்த வழக்கு துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல்  அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோர்கள் மீது உள்ள வழக்கை அமலாக்கத்துறை அதிரடியாக விசாரணை செய்து வருகிறது.


ALSO READ: என்.ஐ.ஏ சோதனை சட்டவிதி மீறல்.. நாம் தமிழர் கட்சியின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு

மேலும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி,  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியவர்களும் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருப்பதாகவும்  முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் மீது அமலாக்கத்துறை கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. அதேபோல் சச்சின் பைலட்,  கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோரும் சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்களை  பயமுறுத்த அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறதா என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments