Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

Advertiesment
புனே

Siva

, ஞாயிறு, 4 மே 2025 (07:28 IST)
மகாராஷ்டிரா மாநில புனே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் 19 வயது வாலிபர் ஒருவர் நுழைந்து, தேவி சிலையின் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படும் சம்பவம் இந்து சமுதாயத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனேவில் உள்ள நாகேஸ்வர் மகாதேவ் கோவில் இந்த பகுதியில் மிகவும் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தகவலின்படி, நேற்று இரவு நவ்ஷத் என்ற 19 வயது இளைஞர் கோவிலுக்குள் நுழைந்து, உள்ளிருந்து கதவை பூட்டி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அங்குள்ள தேவியின் சிலையின் மீது சிறுநீர் கழித்து செயல்பட்டதாக தெரிகிறது.

இந்த செயலைப் பற்றி கேள்விப்பட்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து, காவல்துறைக்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த செயலுக்கு எதிராக சிவாஜி மாருதி என்பவர் புகார் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நவ்ஷத்தின் தந்தை, "இந்துக்கள் எதுவும் செய்ய முடியாது" என உரைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். சமூக வலைதளங்களில் இது குறித்த கடும் கண்டனங்கள் கிளம்பி வருகின்றன.

இந்துக்களின் கொந்தளிப்பை அடக்க, காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கை மட்டுமே சமுதாயத்தின் கோபத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!