Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்-டாக் சாகசத்தால் முதுகெலும்பு முறிந்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (12:51 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் டிக்-டாக் வீடியோவில் புகழ் பெற 22 வயது இளைஞர் ஒருவர் நண்பரின் உதவியோடு பின்பக்கமாக பல்டி அடித்து சாகசம் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக டைமிங் மிஸ் ஆனதால்  அவரது தலை நேரடியாக தரையில் மோதியதால் அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பு முறிந்தது
 
இதனையடுத்து அந்த இளைஞர் பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கழுத்து மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் பிழைப்பது கடினம் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் 
 
இந்த நிலையில் ஒருவார சிகிச்சைக்கு பின் அந்த இளைஞர் இன்று பரிதாபமாக மரணம் அடைந்தார். மரணம் அடைந்த இளைஞர் குமாரசாமி என்பவர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன். டிக்டாக் மோகத்தால் ஒரே மகனை இழந்த அவரது பெற்றோர்கள், மகனின் பிணத்தின் முன் கண்ணீர் விட்டு கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது
 
இனிமேலாவது டிக்-டாக் வீடியோவிற்காக ரிஸ்க் எடுக்கும் வழக்கத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஷ்டத்துக்கு பேசிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? பெண் ராணுவ அதிகாரி விவகாரத்தில் பாஜக அமைச்சருக்கு குட்டு!

வேலூரில் ரோடு ஷோ.. தவெக தலைவர் விஜய் திட்டம்..

இந்தியாவின் இன்னொரு தொழிற்சாலை.. டிரம்ப் பேச்சை மதிக்காத ஆப்பிள் டிம் குக்..!

தமிழகத்தை உலுக்கிய சிவகிரி கொலை வழக்கு! தமிழக காவல்துறையின் ஆக்‌ஷனுக்கு அண்ணாமலை வாழ்த்து!

இந்தியாவின் ஒரே ஒரு நடவடிக்கை.. பங்களாதேஷ்க்கு ரூ.6581 கோடி இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments