கேரளாவில் 6 மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிவாசி இளம்பெண் ஒருவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அந்த பெண்ணிற்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அந்த பெண்ணுக்கு சிறிது நேரத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு நிமோனியா மற்றும் ஜன்னி நோய் உள்ள காரணத்தால் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 7 மணி நேரத்திற்குள் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
திருவனந்தபுரத்திற்கு குறைந்தபட்சம் 10 மணி நேரமாகும். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஒன்றிணைந்து குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர்.
மன்னார்காட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை உள்ள 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இணைந்து 365 கிலோ மீட்டர் தூரத்தை 5½ மணி நேரத்தில் கடந்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.