Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளவில் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (12:02 IST)
கேரள மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இதே போல கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 
 
மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் வட கேரளா மாவட்டங்களான கோழிக்கோடு மற்றும் கண்ணூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பாலக்காடு மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைத் தவிர, மற்ற ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன. கனமழை காரணமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் இன்று கேரளா வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்ல, பாகிஸ்தான் பங்குச்சந்தையும் ஏற்றம்..!

ஒரே நாளில் இரண்டாவது முறை தங்கம் விலை சரிவு! மகிழ்ச்சியில் மக்கள்!

அன்றே கணித்த அப்துல் கலாம்! அடித்து துவம்சம் செய்த ஆகாஷ் ஏவுகணைகள்! - மாஸ் காட்டிய இந்திய கண்டுபிடிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments