ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் வெயிலால் 24 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் மட்டுமல்ல தமிழகத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமகவே உள்ளது. ஏதோ நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. சென்னையில் மழை இல்லை என்றாலும் கருமேகங்களும் இதமான காற்றும் வீசியது.
ஆனால், தெலங்கானாவின் நிலை இப்படி இல்லை. கடந்த சில நாட்களாக அங்கு கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் தெலங்கனாவில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயில் காரணமக 7 பேர் பலியாகினர்.
வெயிலின் தாக்கம் மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதே போல கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெயில் காரணமாக தெலங்கானா மாநிலம் முழுவதும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஆந்திராவிலும் கடந்த திங்கள் மற்றும் செய்வாய் ஆகிய இரு நாட்களில் வெயில் காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக பிரகாசம் பகுதியில் 11 பேரும் சித்தூர் பகுதியில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர்.