தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரியில் இருந்து பெட்ரோல் பிடிக்க சென்ற 55 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா நாடான நைஜரில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று நிலைத்தடுமாறி ரயில் தடத்தில் கவிழ்ந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து பெட்ரோல் கசியத் துவங்கியது.
இதை கண்ட மக்கள் பலர் பெட்ரோலை பிடிக்க கூட்டமாக லாரியை சூழ்ந்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக லாரி வெடித்து சிதறியது. இதில் 55 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நைஜரில் உள்ள விமான நிலையத்திற்கு அருகிலேயே நடந்துள்ளது. மேலும், லாரி வெடித்ததால் பக்கத்தில் இருந்த வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கும் தீ பரவியதால் பலத்த பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.