Webdunia - Bharat's app for daily news and videos

Install App

70 வது குடியரசு தினம் .. தேசம் நமக்கு சொல்வது என்ன..?

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (21:12 IST)
பண்பாட்டிலும் கல்வியிலும், கலாச்சாரத்திலும், அறிவிலும், இயற்கை வளத்திலும் உலகில் மற்ற தேசங்களை விட ஈடுஇணையற்றது நம் இந்திய நாடு. நம் தேசம் 200 வருடங்களுக்கு மேலாக இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்தது. அப்போது எண்ணற்ற தலைவர்கள் தியாகிகள், ஆண்கள் , பெண்கள் , வீரர்கள், கல்வியாளர்கள் என எல்லோரும் நம்தேசத்தின் விடுதலை எண்ணும் விடியலுக்காக தன்னுயிரை துச்சமெனக் கருது போரடினர் . அவர்களின் ரத்தத்தில் விளைந்த தேசத்தில் தான் இப்போது நாம் உயிர்த்துள்ளோம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். 
அதேசமயம் அவர்கள் இல்லையென்றால் நாமும் காலனியாதிக்கத்தின் கீழ் இன்னமும் அடிமைப்பட்டு இருந்திருப்போம்.அத்தகைய விடுதலைப் போராட்ட தலைவர்களில் முக்கியமானவர்கள் : காந்தி, நேதாஜி, பாரதி, சரோஜினி நாயுடு, ராஜாஜி, நேரு , போன்றோர் ஆவர்.
 
பல தியாகிகளின் உன்னதத்தில் விளைந்தது நம் சுதந்திர தேசம்... நமக்கு ஆங்கிலேயர்கள்  சுதந்திரம் கொடுத்த  ஆண்டு ஆகஸ்ட் 15 1947 ஆகும்.
 
அதன்பின்பு தான் நம் நாடு ஜனவரி 26 1950 ஆண்டு குடியரசாக்கப்பட்டது. அந்த முதல் குடியரசு தினத்தில் நம் நாட்டின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர பிரசாத் கலந்துகொள்கிறார். அவருக்கு சிறப்பான அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.
 
இந்த குடியரசு நாளின் போது வழக்கமாக ஒவ்வொரு வருடமும்  ஒரு சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களை கௌரவிப்பது  நம் நாட்டின் வழக்கம்.
 
நம் நாட்டில் நடைபெற்ற முதல் குடியரசு தினத்தின் போது (1950) ஆம் ஆண்டு இந்தோனேஷிய அதிபர் சுகர்ணோ கலந்து கொண்டு அன்று குடியரசு தினக் கொண்டாட்டத்தை சிறப்பித்தார்.அதன் பிறகு பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டும் நம் குடியரசு தினத்தை சிறப்பித்துள்ளனர்.
 
மேற்சொன்னது போல் 1995 ஆம் ஆண்டில் தொன்னாப்பிரிக்கா அதிபர் நெல்சன்மண்டேலாவும், கடந்த 2015 ஆம் ஆண்டு  அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொண்டனர்.
 
இவ்வளவு சிறப்பு  மிக்க நம் குடியரசு தினம் நாம் போற்றத்தக்கது ஆகும். இவ்வருடம் அமெரிக்க அதிபரும் மோடியின் நண்பருமான டொனால்ட் டிரம்ப் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
நாமும் நமது தேசத்தின் பலமாக நம்புகின்ற இளைஞர்கள் படையைக் கொண்டு அப்துல்கலாம் சொன்னது போல் உலகின் வல்லரசாகக் கட்டியெழுப்புவோம் என இந்த 70 வது குடியரசு நாளில் நாம் சபதம் ஏற்போமா...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

ஆபாச படங்களை பார்த்து மருமகளிடம் தவறாக நடந்து கொண்ட மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்..!

கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்க பெயரை வைக்கலாமா? - எடப்பாடியாரை தாக்கிய மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments