இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் பயன்படுத்துவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் மெசேஜ்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிர்வு மட்டும் இன்றி பண பரிவர்த்தனை வசதியும் தற்போது இதில் உள்ளது என்பதும் அதேபோல் ஆடியோ கால் வீடியோ கால் வசதியும் உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மட்டும் 71 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு தடை விதித்துள்ளதாக மெட்டா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தான் 71 லட்சம் கணக்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர்களிடமிருந்து பெறப்பட்ட 8,841 புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மெட்டா நிர்வாகம் கூறியுள்ளது.