Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவில் பயங்கர தீவிபத்து: 9 தீயணைப்பு வீரர்கள் பலி!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (07:57 IST)
கொல்கத்தாவில் பயங்கர தீவிபத்து: 9 தீயணைப்பு வீரர்கள் பலி!
கொல்கத்தாவில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் 9 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன 
 
கொல்கத்தா ஸ்டாரெண்ட் என்ற பகுதியில் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள 13-வது மாடியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைப்பதற்கு லிப்ட்டில் சென்றனர் 
 
அப்போது திடீரென லிப்ட் நின்று கொண்டதை அடுத்து அந்த லிப்டில் இருந்த 9 தீயணிஅப்பு வீரர்களும் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டார். மேலும் உயிரிழந்த 9 தீயணைப்பு வீரர்களும் தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments