Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் தீர்மானம்: ஸ்தம்பித்த நாடாளுமன்றம்..!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (11:38 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. நீட் விலக்கு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப தமிழ்நாடு எம்பிக்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு எதிராக மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தீர்மானம் கொண்டு வந்தார்.
 
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டதால் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது. இதனை அடுத்து பிற்பகல் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். 
 
நாடாளுமன்றம் மீண்டும் இரண்டு மணிக்கு கூடினாலும் கண்டிப்பாக ராகுல் காந்தி விவகாரம் குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் இடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

பாகிஸ்தான் யூடியூபருடன் நெருக்கம்.. ஜோதி மல்ஹோத்ரா குறித்த திடுக் தகவல்..!

தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் போலீஸ்.. நாகை கலெக்டர் ஆபீசில் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments