Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் பதிவால் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவி

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (09:39 IST)
மத்தியபிரதேசத்தில் ஆசிரியர்களை தேசத் துரோகி என பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவியை கல்லூரியில் இருந்து ஓராண்டு நீக்குவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த மாணவி அஸ்மா கான் போபாலில் உள்ள மோதிலால் விக்யான் மஹா வித்யாலயா என்ற கல்லூரியில் அறிவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான நேற்று மாணவி அஸ்மா, கல்லுாரி வளாகத்தில் நிகழ்ச்சி நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
 
இதனையடுத்து கோபமடைந்த அஸ்மா கான், பகத் சிங் பற்றி நிகழ்ச்சி நடத்த தனக்கு அனுமதி அளிக்க மறுத்த ஆசிரியர்கள், தேச விரோதிகள் என பேஸ்புக்கில் பதிவிட்டார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செயலைக் கண்டித்து அஸ்மா கானை, கல்லுாரியில் இருந்து ஒரு ஆண்டு நீக்குவதாக நிர்வாகம் அறிவித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments