Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவரின் வெற்றிக்கு மறைமுக உதவி செய்யும் காங்கிரஸ்?

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (06:49 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் குறிப்பாக தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளன. குறிப்பாக பாஜகவை வரும் தேர்தலில் வீழ்த்த காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறது.

இந்த நிலையில் பாஜகவின் அதிருப்தி தலைவர்களில் ஒருவராகிய யஷ்வந்த் சின்ஹா வரும் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொகுதியில் யஷ்வந்த் சிங்கிற்கு எதிராக வேட்பாளரை நிறுத்தாமல் அவருக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் மீதியுள்ள ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்து தலா மூன்று தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது. காங்கிரஸின் இந்த புத்திசாலித்தனமான வியூகத்தால் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்வது கடினம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments