Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்நாட்டை அடைந்தார் இந்தியாவின் மகன் அபிநந்தன் – மக்கள் உற்சாக வரவேற்பு !

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (17:24 IST)
பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானி அபிநந்தன் இந்திய எல்லையான வாகாப் பகுதியை வந்தடைந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

பாகிஸ்தானிடம் இருந்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் மற்றும் உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மூலமாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. பல்வேறு அழுத்தங்களை அடுத்து நல்லெண்ண அடிப்படையிலும் விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் காலையில் வெளியாகியாகின. அதையடுத்து இன்று அவர் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார். பாகிஸ்தான் அரசு அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சற்று முன்னர் அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மாலை 3 மணியளவில் அவர் இந்திய எல்லையை வந்தடைவார் என்று கூறப்பட்டது. ஆனால் சற்று தாமதமாக அவர் இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாப் பகுதிக்கு அவர் அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் அவர் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்பியதை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

இதையடுத்து அவருக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் டி ப்ரிஸிங் ஆகிய ஆலோசனைகள் நடத்தப்பட இருக்கின்றன. அதன் பின்னரே அவர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல் அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பிறகு அவர் ஊடகங்களையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments