Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென 70க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து.. என்ன காரணம்?

Mahendran
புதன், 8 மே 2024 (12:43 IST)
நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளதாகவும், விமான நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர் கடைசி நேரத்தில் விடுப்பு எடுத்ததால் நேற்றிரவு முதல் இன்று காலை வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் 70க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேலும் முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழு தொகையும் திரும்ப அளிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. 
 
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments