Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோமனியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் கிளம்பியது!

Webdunia
சனி, 26 பிப்ரவரி 2022 (10:45 IST)
ரோமனியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம், உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்களுடன் புறப்பட்டது. 

 
உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5,000 பேர் உள்ளனர். 
 
இதனிடையே உக்ரைன் தனது வான் எல்லையை மூடியது. இதனால், இந்தியர்களை மீட்க சென்ற இந்திய சிறப்பு விமானங்கள் திரும்பி வந்து விட்டன. தற்போது போர் தீவிரமாகி வருவதால், இவர்களால் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்கப்பட உள்ளது. அதன்படி ருமேனியா தலைநகர் புகாரெஸ்டில் இருந்து இந்தியர்களை அழைத்துவர ஏர் இந்தியா விமானம் அதிகாலை 3.30 மணிக்கு மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என ஏர் இந்தியா தெரிவித்தது.
 
இதனிடையே ரோமனியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம், உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்களுடன் புறப்பட்டது. அந்த விமானம் இன்று மாலை 4 மணிக்கு மும்பை தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments