Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா முழுவதும் மூடப்படுகிறது நட்சத்திர ஓட்டல்கள்: அதிரடி அறிவிப்பு

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (17:17 IST)
இந்தியா முழுவதும் மூடப்படுகிறது நட்சத்திர ஓட்டல்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக இந்தியா முழுவதும் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் மால்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன
 
இதனையடுத்து தற்போது இந்தியா முழுவதும் நட்சத்திர ஓட்டல்களையும் வரும் 31ம் தேதி வரை மூட அகில இந்திய நட்சத்திர விடுதிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நட்சத்திர விடுதிகளும் இன்று முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய நட்சத்திர விடுதிகள் சங்க துணை தலைவர் அபுபக்கர் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
 
இதனை அடுத்து நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகள், உணவகங்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கூடங்கள், மது அருந்தும் இடம் ஆகிய அனைத்தும் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அகில இந்திய நட்சத்திர விடுதிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments