Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டியாலாவில் மண்ணை கவ்விய அமரீந்தர் சிங்! – பஞ்சாபை பிடித்த ஆம் ஆத்மி!

Webdunia
வியாழன், 10 மார்ச் 2022 (13:18 IST)
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் புதிய கட்சி தொடங்கிய அமரீந்தர் சிங் தோல்வியை தழுவினார்.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து முடிந்தது. தற்போது 5 மாநிலங்களுக்கும் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி பஞ்சாபில் அநேக இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாபில் பெரும்பான்மைக்கு 59 இடங்கள் தேவையான நிலையில் ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தான் போட்டியிட்ட பட்டியாலா தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments