நம் இந்தியாவில் மக்கள் நலத்திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிடும் தொகையைக் காட்டிலும் இந்தியாவின் நெம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியிடம் பணம் அதிகமாக உள்ளதாக ஆக்ஃபாம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
வருடம் தோறும் சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திரக் கூட்டம் நடைபெறும். இவ்வருடம் நடைபெற்ற கூட்டத்தில் ஆக்ஃபாம் அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் ஒரு பகுதியில் கூறப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டு வரை 2 நாட்களுக்கு ஒருமுறை புதிய கோடீஸ்வரர் உருவாகிவருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள குழந்தைகள் இறப்பு விகிதம் ஆப்பிரிக்க துணை கண்டத்தை விட அதிகமாக உள்ளதாககவும் தெரிவித்துள்ளது.
மேலும், பிரதமர் மோடி ஏழைக்களுக்காக திட்டங்களைக் கொண்டு வரும்போது இந்தியாவில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக தெரிவித்துள்ள அதேசமயம், இந்தியாவில் மத்திய அரசு நலத்திட்ட தொகையை விட, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியிடம் அதிக தொகை உள்ளது என அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கின்றன.