Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி விமான நிலையத்தில்தான் குளிக்கிறார்; உங்களை மாதிரியா? – பாடம் எடுத்த அமித்ஷா!

Webdunia
வியாழன், 28 நவம்பர் 2019 (20:24 IST)
சிறப்பு பாதுகாப்பு பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் அமித்ஷா.

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பை ரத்து செய்ததற்கு காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பாதுகாப்பு அந்தஸ்து பிரதம் மற்றும் முன்னாள் பிரதமருக்கு மட்டுமே செல்லுபடியாகும் என மாற்றியமைத்து சட்டம் நிறைவேற்றினார். இதை தொடர்ந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதுகுறித்து பேசிய அமித்ஷா ”பிரதமர் மோடி மிகவும் எளிமையான பிரதமர். வெளிநாடுகளுக்கு செல்லும்போது விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டால் உடனடியாக ஹோட்டல்களில் ரூம் புக் செய்து கொள்பவரல்ல பிரதமர் மோடி. விமானங்கள் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டாலும் மோடி விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதில்லை. விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார். அங்கேயே குளிக்கிறார், தனது பணிகளை முடித்து கொள்கிறார்.

மேலும் சோனியா காந்தி குடும்பத்தினர் இதுவரை 600 முறைக்கும் மேல் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்காமலே வெளிநாடுகள் சென்று வந்துள்ளனர். அரசியல் வாழ்க்கைக்கு வந்துவிட்டால் அனைவரும் சட்டத்தை மதிக்க வேண்டும். மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக சிறப்பு படைபிரிவை ரத்து செய்யவில்லை. அதிகாரிகளின் ஆய்வு முடிவுகளுக்கு பிறகே ரத்து செய்யப்பட்டது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments