Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரே நாளில் தமிழகம் வரும் அமித்ஷா-ராகுல் காந்தி: சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..!

தேர்தல் பிரச்சாரம்
Siva
வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:32 IST)
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். மாநில கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சி தலைவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது தெரிந்தது.

அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள் பிரச்சார பயணம் செய்யவுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரையில் பிரச்சாரம் செய்த பின்னர் நாளை குமரியில் ரோடு ஷோ மூலம் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து  அமித்ஷா பிரச்சாரம் செய்யவுள்ளார். அதையடுத்து திருவாரூரிலும் தென்காசியில் வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார்

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து இன்று பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி. கோவையில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

ஒரே நாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இருவரும் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர இருப்பதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது என்பது தெரிய வருகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments