பாகிஸ்தான் நாட்டுடன் எந்தவிதமான வார்த்தைக்கும் வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பேசிய போது நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஆட்சி செய்தவர்களால் காஷ்மீர் வளர்ச்சி அடையவில்லை. ஆனால் தற்போது காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பதும் ஜம்மு-காஷ்மீர் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது என்றும் கூறினார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள் என்றும் ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் காஷ்மீர் மக்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.