Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (14:10 IST)
குவைத்தில் இருந்து ஆந்திரா வந்த இளம் பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவிலும் படிப்படியாக மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அவர் கடந்த 19ஆம் தேதி ஆந்திரா திரும்பினார். அப்போது அவருக்கு பரிசோதனை செய்தபோது புதிய வகை கொரோனா வைரஸ் அதாவது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. 
 
இதனையடுத்து அந்த இளம் பெண்ணையும் அவருடைய குடும்பத்தாரையும் ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் அந்த இளம் பெண்ணுடன் வேறு யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments