Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிஸ்தான் அமைப்பிடமிருந்து கெஜ்ரிவாலுக்கு நிதி.? என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆளான முதல் முதல்வர்..!

அரவிந்த் கெஜ்ரிவால்
Mahendran
செவ்வாய், 7 மே 2024 (10:18 IST)
காலிஸ்தான்  தீவிரவாத அமைப்பிடமிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் பணம் பெற்றுள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்ய என்.ஐ.ஏ அமைப்புக்கு டெல்லி ஆளுநர் பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள முதல்வர் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது. 
 
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிக்கி சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுப்பி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 16 மில்லியன் டாலர் ஆம் ஆத்மி கட்சி காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிலிருந்து பெற்றதாகவும் நியூயார்க்கில் காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்ததாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு டெல்லி கவர்னர் சக்சேனா கோரிக்கை விடுத்துக் கடிதம் எழுதிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இது அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுமத்தப்படும் மற்றொரு பெரிய சதி என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments