ஏற்கனவே ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போஜ சாலை வளாகத்தில் உள்ள மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு செய்து வருவதாகவும் அங்கே சரஸ்வதி கோயில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அது குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
போஜ சாலை வளாக கோயிலில் இந்துக்கள் கடந்த சில வருடங்களாக வழிபாடு செய்து வரும் நிலையில் இங்கு மசூதிக்குள் சரஸ்வதி கோவில் இருப்பதாக ஒரு தரப்பினர் கூறியது சர்ச்சைக்கு உள்ளானது
இதனை அடுத்து இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தொல்லியல் துறை இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து போஜ சாலை வளாக மசூதியில் தொல்லியல் துறையினர் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வருவதாகவும் அந்த ஆய்வில் ஆய்வின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் ஆய்வு நடத்த உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இஸ்லாமியர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.