Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரம்: சிபிஐ விசாரிக்க மத்திய அரசு பரிந்துரை

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (20:00 IST)
மணிப்பூர் மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மெய்தி மற்றும் குகி ஆகிய இரண்டு சமூகத்தினருக்கு இடையே திடீர் வன்முறை ஏற்பட்டது.
 
அந்த மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்த நிலையில், அங்குள்ள கட்டிடங்கள், வீடுகள் உள்ளிட்ட பல இடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 100 க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியானது.
 
சமீபத்தில், 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஒரு கும்பல் சாலையில் இழுத்துச் சென்ற வீடியோ பரவலான நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை போலீஸார் கைது செய்திருந்ததை அடுத்து, சமீபத்தில் 7 வதாக மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். 
 
இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  இரு பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக  விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளாது. விசாரணையை மணிப்பூருக்கு வெளியே நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments