Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைபர் தாக்குதலால் ஏடிஎம், வங்கி சேவை பாதிப்பா? முன்னணி வங்கிகள் விளக்கம்..!

Cyber Crime
Mahendran
வெள்ளி, 9 மே 2025 (15:39 IST)
பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல்வேறு அரசுப் வங்கிகள், தற்போது ஏடிஎம்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் வழக்கம்போல இயங்குகின்றன என உறுதிபட தெரிவித்துள்ளன.
 
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பரபரப்பு சூழலைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் “ஏடிஎம்கள் விரைவில் மூடப்படும்” என்ற போலி தகவல்கள் பரவியதைத் தடுக்கும் வகையில், வங்கிகள் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
 
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது எக்ஸ்  பக்கத்தில், “எங்கள் ஏடிஎம்கள், சிடிஎம்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் இயல்பாக இயங்குகின்றன. வாடிக்கையாளர்கள் எந்தவித தடையுமின்றி பயன் பெறலாம்” என்று கூறியுள்ளது. மேலும், பொய்யான செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளது.
 
பஞ்சாப் நேஷனல் வங்கியும், “நீங்கள் வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாக ஆன்லைன் வங்கி சேவைகளைப் பயன்படுத்தலாம். எங்கள் சேவைகள் அனைத்தும் சரியாக இயங்குகின்றன” என தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை வங்கிகளின் சைபர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments