Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு வந்த ஏலியன்கள்! – வைரலான வீடியோவின் உண்மை பிண்ணனி!

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (17:49 IST)
சமீப காலமாக ஏலியன்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் சித்தரிக்கப்பட்டவையாகவோ அல்லது காட்சி பிழையாகவோ இருந்து விடுகின்றன.

ஏலியன்களின் பறக்கும் தட்டுகள் வானத்தில் தெரிவது, ஏலியன்கள் சாலையில் நடந்து போவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. அப்படி இணையத்தில் பகிரப்பட்ட ஒரு ஏலியன் வீடியோ இணையத்தில் சமீப காலமாக ட்ரெண்டாகி வருகிறது.

ஆனால் ஏலியன் பறக்கும் தட்டிலோ, சாலையிலோ அல்ல, ஒரு வீட்டு மேல்தளத்தில் இருக்கிறது. உண்மையாக அது ஒரு ஏலியனே அல்ல. ஏலியன் போன்ற கருமை நிறமான பெரிய கண்களை கொண்டு பார்க்கவே வித்தியாசமாக தோன்றும் அவை பிறந்து சில நாட்களே ஆன ஆந்தை குட்டிகள்.

இந்த ஆந்தை குட்டிகளின் வீடியோ விசாகப்பட்டிணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதை சில சமூக வலைதளங்களில் “இந்தியாவில் ஏலியன்” என்ற பெயரில் பலர் பதிவிட்டு வர, அதற்கு விளக்கம் கொடுத்த நேரு உயிரியல் பூங்கா ஆய்வாளர்கள் “அது ஏலியன் அல்ல. இந்தியாவின் டைட்டோனிடே குடும்பத்தை சேர்ந்த கூகை ஆந்தை” என்று விளக்கமளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments