குஜராத் மாநிலத்தின் முதல்வராக 2 வது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் குஜராத்தில் பாஜகவும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் ஆட்சி அமைக்க உள்ளது.
குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக வென்றது.( ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது).
குஜராத் மாநிலத்தில் 7 வது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில்,குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், குஜராத் மாநில முதல்வராக 2 வது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
காந்தி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பங்கேற்றனர்.
Edited By Sinoj