அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

Siva
புதன், 11 ஜூன் 2025 (20:01 IST)
அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க உறுதி கொடுத்திருப்பதாக பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ், பாஜக உள்பட அரசியல் கட்சிகள் பீகாரில் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் அவ்வப்போது பீகார் மாநிலத்திற்குச் சென்று வருகின்றனர்.
 
இந்த நிலையில், பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, பேரரசர் அசோகரின் வாரிசுகளை சந்தித்ததாகவும், அவர்கள் பாஜகவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
ஜெகதேவ் பிரசாந்த் மற்றும் அவரது வம்சாவளியினர் பேரரசர் அசோகரின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது. "கடந்த தேர்தலில் கூட பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், இந்த தேர்தலிலும் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக தன்னிடம் கூறியதாக, துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி கூறியுள்ளார். 
 
இது பீகார் மாநில தேர்தலில் திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் நிதானமே வெற்றியை நோக்கிய அறிகுறி": முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை!

எடப்பாடி பழனிசாமியை வரவேற்று த.வெ.க. நிர்வாகி வைத்த பேனர்.. கூட்டணி உறுதியாகிறதா?

கரூர் துயர சம்பவம் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு செல்கிறதா? நீதிபதிகள் தீவிர விசாரணை..!

750,000 பெடரல் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்களா? டிரம்ப் அதிர்ச்சி திட்டம்..!

இந்தியாவில் ஆரம்ப கல்வி சிறப்பாக செயல்படவில்லை.. கொலம்பியாவில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments