Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கியுடன் குத்தாட்டம் போட்ட பாஜக எம்.எல்.ஏ..வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (14:19 IST)
உத்திரகாண்டைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கைகளில் துப்பாக்கியுடன் குடிபோதையில் நடனம் ஆடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உத்திரகாண்ட் மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ. பிரணவ் சிங், பத்திரிக்கையாளர்களை மிரட்டி, தாக்க முயன்ற விவகாரத்தால், கடந்த மாதம் கட்சித் தலைமையால், 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தனது காலில் அறுவை சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பிரணவ் சிங், தனது ஆதரவாளர்களுடன் தான் சிசிச்சை பலன் பெற்று மீண்டு வந்ததை மது அருந்தி கொண்டாடியுள்ளார்.

இந்த கொண்டாட்டத்தின் போது, பிரபல பாலிவுட் குத்து பாடல் ஒன்றிற்கு கைகளில் துப்பாக்கியுடன் நடனமாடியுள்ளார். அதை அந்த கொண்டாட்டத்தில் பங்குபெற்ற பிரணவ் சிங்கின் ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னை சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments