44 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்தும் எந்தவிதமான பெரிய பதவியும் கிடைக்காத நிலையில், பாஜகவில் இணைந்தவுடன் பதவி கிடைத்துள்ளது என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரவி ராஜா, 44 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்வர். மும்பையில் அவர் அரசியல்வாதியாக இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது மும்பை நகர பாஜக துணைத் தலைவர் பதவியை பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "44 ஆண்டுகளாக நான் செய்த பணிகளை காங்கிரஸ் மதிக்கவில்லை; எனது உழைப்பை அக்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், பாஜகவில் இணைந்ததும் எனக்கு மும்பை நகர பாஜக துணைத் தலைவர் பதவி கிடைத்தது," என்றார்.
அவரது வருகை குறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "ரவி ராஜா மிக வலிமையான தலைவர்; அவர் மும்பை அரசியல்வாதிகளின் சூத்திரதாரி. அவரது வருகையால் பாஜக பெரும் பலத்தை அடையும், அவருடைய திறமைக்கு இன்னும் உயர்ந்த பதவிகள் வழங்கப்படும்," எனக் குறிப்பிட்டார்.