Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் சொந்த ஊரில் தோல்வியடைந்த பாஜக

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (07:49 IST)
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த ஊரான ஊஞ்சா சட்டசபைத் தொகுதியில் பாஜக அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது.
குஜராத், இமாச்சல பிரதேஷ் தேர்தல்களின் முடிவுகள் நேற்று வெளியானது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் 99 இடங்களைப் பிடித்து பாஜக வெற்றி பெற்றது, 77 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலில் பாஜக 44 இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளது, காங்கிரஸ்  20 இடங்களைப் பிடித்து தோல்வியடைந்துள்ளது. ஆனால் குஜராத்தில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான மெஹ்சானா மாவட்டத்தில் கேராலு, ஊஞ்சா ஆகிய இரு தொகுதிகளில், ஊஞ்சா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துவாரகதாஸ் படேல் 74 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் லாலுதாஸ் படேல் தோல்வியை தழுவினார். 
 
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஊஞ்சா தொகுதியில் விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே பாஜகவுக்கு எதிராக அவர்கள் ஓட்டளித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments