Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. பாஜக மூத்த தலைவர் கருத்து..!

Mahendran
வியாழன், 10 ஏப்ரல் 2025 (16:42 IST)
நிதீஷ் குமாருக்கு துணை முதல்வர் பதவியை தர வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர்,  தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், நிதீஷ் குமார் தலைமையில் உள்ள கட்சி தான் முக்கிய ஆதரவாக இருந்தது என்பதும், அந்தக் கட்சி கூட்டணியில் இருந்து விலகினால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் அஸ்வினி குமார் சவுபே என்பவர் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசியபோது, "தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிதீஷ் குமார் பங்களிப்பு மிகவும் பெரியது. கூட்டணியில் ஒரு நங்கூரமாக அவர் செயல்பட்டு, பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்தி வருகிறார்," என தெரிவித்தார்.

மேலும், "என்னுடைய தனிப்பட்ட விருப்பம் என்னவென்றால், நிதீஷ் குமார் துணை பிரதமராக வேண்டும். பாபு ஜாக் விஜயன் ராம் அவர்களுக்குப் பிறகு, பீகார் மாநிலம் இன்னொரு துணை பிரதமரை பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசை," என்றும் அவர் கூறினார்.

பாஜகவில் உள்ள தலைவர்களில் யாரும் இதுவரை 'துணை பிரதமர்' பற்றிய பேச்சை எடுக்காத நிலையில், இவரது ஆசை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதாளத்தில் பாய்ந்த டெஸ்லா பங்குகள்.. ட்ரம்ப்பை கழட்டிவிட முடிவு செய்த எலான் மஸ்க்?

இந்திய எல்லையை பாதுகாக்க 150 புதிய செயற்கைக்கோள்கள்! - இஸ்ரோ அறிவிப்பு!

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments