Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுழற்றி அடித்த மோடி அலை; குஜராத், இமாச்சல பிரதேசத்தில்: பாஜக அமோக வெற்றி!!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (18:45 IST)
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் முடிவுற்றன. குஜராத் மாநிலத்தில் கடந்த டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இமாச்சலில் நவம்பர் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.
 
இன்று இவ்விரு தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து மோடி பின்வருமாறு கூறியுள்ளார், பாரதிய ஜனதா கட்சி மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் நம்பிக்கைக்காக குஜராத், இமாச்சலப் பிரதேசம் மக்களுக்கு தலை வணங்குகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், குஜராத், இமாச்சல பிரதேசம் மாநிலங்களில் வளர்ச்சிப்பாதையை மீண்டும் விரிவுப்படுத்த சளைக்காமல் உழைப்போம் என்று உறுதியளிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும். மேலும், இரு மாநிலங்களிலும் அமையவுள்ள அரசுகளுக்கு வாழ்த்துக்கள். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் மாநில மக்கள் என் மீது பொழிந்த அன்புக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

ஹைதராபாத் தீ விபத்தில் 17 பேர் பலி: பலியானவர்களுக்கு 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர்

அடுத்த கட்டுரையில்
Show comments