கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட வெடி விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அஞ்சுதம்பலம் வீரராகவ கோவிலில் காளியாட்ட திருவிழா நேற்றுக் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பட்டாசுகள், வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. அதில் தவறுதலாக சில பட்டாசுகள் பறந்து சென்று, பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்குள்ளேயே விழுந்து வெடித்துள்ளது.
இதனால் குடோன் அருகே நின்றிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் வெடிவிபத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 154 பேர் காயமடைந்துள்ள நிலையில், 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக கோவில் நிர்வாக கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், பட்டாசு விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Edit by Prasanth.K