Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த சிபிஎஸ்இ திட்டம்?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (11:01 IST)
மாணவ - மாணவியருக்கான பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என தகவல். 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் மாணவர்களுக்கு பாடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.
 
இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின் படி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி முதல் பருவத்தேர்வு தொடங்குகிறது என்றும் அதேபோல் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான முதல் பருவ தேர்வு சிபிஎஸ்இ அட்டவணை வெளியான நிலையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ - மாணவியருக்கான பொதுத் தேர்வை 2 கட்டமாக நடத்த அந்நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் பதவியையும் பறிகொடுத்து நிற்பவர் தமிழிசை.. மக்கள் நீதி மய்யம் விமர்சனம்..!

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை.. கொந்தளித்த ஈபிஎஸ்..!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் திருடு போகவே இல்லை: பாஜக விளக்கம்..!

இந்த ஆண்டு மிகச்சிறந்த மழை காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

மதுரை காவல்நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட தலை.. உடல் எங்கே? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments