Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய கரண்ட்டுக்கும் மீட்டர் கட்டாயம்..1000 ரூபாய்க்கு மேல போனா..! – மத்திய அரசு உத்தரவு!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (09:22 IST)
இந்தியாவில் மின் இணைப்புகள் மற்றும் மின் கட்டணங்கள் குறித்த புதிய விதிமுறைகளை மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வீட்டு மின்சாரம், விவசாய மின் இணைப்புகள் ஆகியவற்றுக்கான புதிய வழிமுறைகளின்படி, விவசாய மின் இணைப்பிற்கும் இனி கட்டாயம் மின் மீட்டர் பொருத்த வேண்டும்.

மேலும் மின் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் ஆன்லைன் மூலமாக மட்டுமே தொகையை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டால் நிறுத்தப்படுவதற்கு முன்பாக குறுஞ்செய்தி அல்லது உள்ளூர் ஊடகங்கள் மூலமாக மின் நிறுத்தம், மீண்டும் மின்சாரம் எப்போது வரும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் மின்துறை சேவையில் குறையோ, புகார்களோ இருந்தால் இனி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments