Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ரயில்வேக்கு 10,000 ரூபாய்…. உத்தரபிரதேசத்துக்கு 7000 கோடி – கொதிக்கும் தமிழக எம்.பி !

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (15:28 IST)
மக்களவை எம்பி சு வெங்கடேசன்

பட்ஜெட்டில் தமிழக ரயில்வே துறைக்கு வெறும் 10000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவை எம்பி சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் பற்றி எதிர்க்கட்சிகள் காட்டமான விமர்சனங்களை வைத்து வருகின்றன. இந்நிலையில் பட்ஜெட்டில் தமிழக ரயில்வேத் துறைக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து மக்களவை எம்.பி. சு வெங்கடேசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ‘தமிழகத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த திட்டங்களுக்கான திட்ட மதிப்பீடு ரூ.12,000 கோடி. ஆனால், தற்போதைய மத்திய பட்ஜெட்டில் ஒவ்வொரு திட்டத்திற்கும் வெறும் ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.10,000 மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் உத்தர பிரதேசத்துக்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments