Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி தமிழ் மொழியிலேயே தொழில்நுட்ப கல்வி! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (17:57 IST)
எதிர்வரும் கல்வியாண்டில் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் படிப்புகளை அந்தந்த மாநிலத்தின் தாய் மொழியிலேயே கற்க வழி செய்யும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வரும் கல்வி ஆண்டில் தொழில்நுட்ப படிப்புகளை மாணவர்கள் விரும்பினால் தங்கள் தாய்மொழியிலேயே படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தொழில்நுட்ப கல்வியை தாய்மொழியில் படிப்பதில் சிக்கல்கள் உள்ளதாக கருதப்படுகிறது.  ஏற்கனவே அண்ணா பல்கலைகழகத்தில் சில பொறியியல் பிரிவு பாடங்கள் தாய்மொழியில் படிக்கும் வசதி உள்ளபோதிலும் மாணவர்கள் அதில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பயில்வன் மீது ஆர்வம் அதிகரிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments