Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி !

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2020 (08:03 IST)
வெங்காய ஏற்றுமதி

கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை அதிகரிக்க தொடங்கியது. பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். வெக்காய தட்டுப்பாட்டால் எகிப்திலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அளவுக்கு நிலைமை இருந்தது. மேலும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

தற்போது நிலமை கட்டுக்குள் வந்து வெங்காய வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முக்கியமாக சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை எக்கசக்கமாக குறைந்துள்ளது. தற்போது மலிவான விலையில் வெங்காயம் கிடைத்து வருகிறது. வெங்காய வரத்தும் அதிகமாகி உள்ளதால் மீண்டும் மார்ச் 15 ஆம் தேதிக்கு மேல் வெங்காய ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments