மத்திய திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பண மதிபிழப்பு நடவடிக்கைகள், ஜிஎஸ்டி ஆகியவற்றை குறித்து பேட்டி அளித்துள்ளார்.
நேற்று மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகே ஒரு விழாவில் கலந்துக்கொண்ட தர்மேந்திர பிரதான் பின்வருமாறி பேசினார், நீங்கள் புதிய செருப்பு வாங்கும்போது, முதலில் சில நாட்களுக்கு கடிக்கவே செய்யும். பிறகுதான் அணிவதற்கு வசதியாக இருக்கும்.
அது போலதான் இந்த பணமதிபிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகளும். இதனால் வேலைவாய்ப்பு பறிபோய் விட்டதாக தேவையின்றி வதந்திகள் பரப்படுகின்றனர்.
இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஜிஎஸ்டியால் சரியாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கூறினார்.