Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா: முதல்வர் பதவியை ஏற்பதில் திடீர் சிக்கல். பாஜக அதிர்ச்சி

Webdunia
திங்கள், 13 மார்ச் 2017 (21:13 IST)
நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய இரு மாநிலங்களில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நிலை உள்ளது.



 


குறிப்பாக கோவா மாநிலத்தில் சிறிய கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பாஜக முன்வந்துள்ளது. அதுமட்டுமின்றி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரை முதல்வராகவும் அறிவித்தது.

இதனால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த மனோகர் பாரிக்கர் நாளை அல்லது நாளை மறுநாள் கோவா முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கோவா மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சந்திரகாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற, காங்கிரசை தான் முதலில் ஆட்சியமைக்க கவர்னர் அழைத்திருக்க வேண்டும் என்றும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் பாஜகவை ஆட்சி அமைக்க கவர்னர் அழைத்தது சட்டவிரோதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டுள்ளது. நாளைய விசாரணையில் மனோகர் பாரிக்கர் அரசு பதவியேற்க தடை விதிக்குமா? என்ற கலக்கத்தில் உள்ளது பாஜக மேலிடம்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments